இலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள். | Gadgettech7



ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த பத்து டொர்ரெண்ட் தளங்களை இந்த பதிவில் தர இருக்கிறேன். இந்த பத்து தளங்களையும் அலெக்ஸா ரேங்க் படி வரிசைப்படுத்தி இருக்கிறேன்.

டொர்ரெண்ட் தளங்களில் டவுன்லோட் செய்யும் போது வேறு ஒருவர் மூலம் நமக்கு தரவிறக்கம் ஆகிறது. இது போன்றவர்களை Seeders என்று அழைப்போம். டவுன்லோட் செய்பவர்களை Leechers என்று அழைப்பார்கள். பைல் பகிரப்படும் முறையை Peers என்றும் அழைப்பார்கள். நாம் ஒரு பைலை டவுன்லோட் செய்யும் போது Seeders, Leecher மற்றும் Peers அடிப்படையில் டவுன்லோட் வேகத்தை கணக்கிட முடியும். இப்போது சிறந்த பத்து தளங்களை பற்றி பார்ப்போம்.



1. Torrentz

இது ரொம்ப பிரபலானது, இந்த சைட்ல 2,50,00,000 (இரண்டரை கோடி) அதிகமான பைல்கள் உள்ளது. அனைத்து விதமான பைல்களும் இந்த தளத்தில் இருக்கு. இந்த தளம் செல்ல https://torrentz.eu/. இதன் அலெக்ஸா ரேங்க்ல ஒரு நேரத்தில் 100க்கும் குறைவாக இருந்தது. இன்று 426வது இடத்தில் இருக்கிறது. இதே நிறுவனத்தின் இந்தியா தளமான https://torrentz.in புகழ் பெற்றது. இன்றைய அலெக்ஸா ரேங்க் 476.

2. Extra Torrent

இந்த தளம் ஒரு நேரத்தில் பின் தங்கி இருந்தது தற்போது அதிக டிரப்பிக் தளத்தில் இருப்பதால் அலெக்ஸா ரேங்க் வரிசையில் இரண்டாம் இடம் பெறுகிறது. இதில் எளிதாக எதையும் சர்ச் செய்து பெற இயலும். இதன் அலெக்ஸா ரேங்க் இன்று 326. தளம் முகவரி http://extratorrent.cc/


3. The Pirate Bay

இந்த டொர்ரெண்ட் தளமும் மிகவும் பிரபலான தளம்தான். 2003ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதனை டொர்ரெண்ட்களின் அரசன் என்று புகழ்வார்கள். இப்போது இது அலெக்ஸா ரேங்க் படி சற்று பின் தங்கி உள்ளது. தற்போதைய ரேங்க் வரிசை 528. தளம் http://thepiratebay.la/

4. Kickass Torrents

இந்த டொர்ரெண்ட் தளம் 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் கிடைக்காத மொபைல் கேம்ஸ்களே இல்லை. மேலும் இதில் படங்கள், பாடல்கள், மென்பொருள், அனிமிகள் என அனைத்தும் கிடைக்கும். சென்ற ஆண்டு முன்னணியில் இருந்த இந்த தளம் இப்போது ரொம்ப பின்தங்கி அலெக்ஸா ரேங்க் வரிசையில் 17283 இடத்தை பிடித்து உள்ளது. http://kickass.to

5. Eztv.ag

இந்த தளம் அலெக்ஸா வரிசையில் 1,497 வந்து பிரபலாகி இருக்கிறது. இந்த தளத்தில் டி‌வி நிகழ்ச்சிகள், ஷார்ட் பிலிம்ஸ், டாகுமெண்ட்டரி படங்கள் என நிறைந்து உள்ளது. https://eztv.ag/

6. Torrenthound.com
இந்த டொர்ரெண்ட் தளம் அலெக்ஸா வரிசையில் 2095 இடத்தை பிடித்து முன்னணியில் உள்ளது. இந்த தளத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒரு லக்சம் பயனாளர்கள் வந்து செல்கிறார்கள். இரண்டு கோடிக்கும் அதிகமான படங்கள், பைல்கள், கேம்ஸ் என அனைத்தும் நிறைந்து உள்ளது. http://www.torrenthound.com/

7. isoHunt.to

இந்த தளத்தில் கேம்ஸ், படங்கள், பாடல்கள், மென்பொருள், அனிமிகள் மற்றும் புத்தகங்கள் என அனைத்தும் கிடைக்கும். இந்த தளம் முன்னணியில் இருந்த நேரம் 17th October of 2013 அன்று சில பிரச்சனைகளால் முடக்கப்பட்டது. இப்போது புத்துயிர் பெற்று அதிக பைல்களை உடைய தளமாக இயங்கி வருகிறது. இந்த தளம் அலெக்ஸா வரிசையில் இந்த தளம் 3588 இடத்தை பிடிக்கிறது. http://isoHunt.to

8. Bitsnoop.com

இந்த தளத்திலும் எல்லாமே கிடைக்கும், இதுவும் ஒரு புகழ் பெற்ற தளமே. இந்த தளத்தின் தற்போதைய அலெக்ஸா ரேங்க். 4141. http://bitsnoop.com

9. Rarbg

இந்த தளத்தில் கேம்ஸ், படங்கள், பாடல்கள், மென்பொருள், டி‌வி நிகழ்ச்சிகள் என எல்லா பைல்களும் கோடி கணக்கில் கொட்டி கிடைக்கிறது.  இந்த தளத்தின் அலெக்ஸா ரேங்க் 8342 தளம்: http://rarbg.com

10. Torrentdownloads.me

இந்த தளத்திலும் மென்பொருள் முதல் கேம்ஸ் வரை எல்லாமே கிடைக்கும், இதுவும் ஒரு புகழ் பெற்ற தளமே. இந்த தளத்தின் தற்போதைய அலெக்ஸா ரேங்க். 3030. http://www.torrentdownloads.me

குறிப்பு: இது போன்ற டொர்ரெண்ட் தளங்களில் நல்ல விஷயங்கள் பல இருந்தாலும், சில தீய விஷயங்களும் இருக்கவே செய்கிறது. உதாரணமாக மால்வேர் என்ற ஒரு வகை வைரஸ் இருக்கலாம். சில தளங்களில் ஆபாசமான படங்கள் இருக்கலாம். நாம் பாதுக்காப்பாக உலவ வேண்டும். நமக்கு தேவையானதை மட்டும் டவுன்லோட் செய்துக்கொள்ள வேண்டும். மேற்கொண்டு உங்களுக்கு ஏற்படும் நல்லது கெட்டதுக்கு தகவல்குரு தளம் பொறுப்பு எற்க்காது.

No comments:

Powered by Blogger.